Pages

Saturday, November 7, 2009

895 கிராம் எடையுள்ள பாம்பு விஷம்

கொச்சி:

ரகசியமாக பாம்பு விஷத்தை சேகரித்து, அதை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ய முயன்ற 12 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, 895 கிராம் எடையுள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலத்தில், பல இடங்களில் ரகசியமாக பாம்பு விஷம் சேகரிக்கப்பட்டு, அவை வெளிநாட்டுக்கு விற்கப்பட்டு வருகிறது.


இதுகுறித்து, தகவலறிந்த வனத்துறை பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில், இரு கார்களை சோதனையிட்டதில், காரில் இருந்த 895 கிராம் எடை கொண்ட பாம்பின் விஷம் சிக்கியது. கார்களில் பயணம் செய்த நான்கு பேர், கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, எர்ணாகுளம் கல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும், கோழிக்கோடு பகுதியில் ஆறு பேரையும் பறக்கும் படையினர் பிடித்தனர்.


அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பாம்பின் விஷத்தை கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து, வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. சிக்கிய விஷம் எந்த பாம்பினுடையது என்பது குறித்து அறிய, அவை ஐதராபாத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலர், தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்கும் பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment