புதுடில்லி:
ஏர்போர்ட்டில், பயணியிடமிருந்து மொபைல் போனைத் திருடிய தனியார் நிறுவனத்தின் உயரதிகாரி பிடிபட்டார். டில்லி பாலம் ஏர்போர்ட்டில் பூரி என்பவர், தனது உடைமைகளை தானியங்கி பரிசோதனை இயந்திரத்துக்குள் அனுப்பிவிட்டு விமான நிலையத்துக்குள் செல்வதற்காக வரிசையில் நின்றார்.
இவருக்குப் பின்னால் சஞ்சய் சோமானி என்பவர் நின்றிருந்தார். இவர் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.முன்னால் நின்ற பூரியிடமிருந்து அவரது பிளாக்பெர்ரி மொபைல் போனை லாவகமாக யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டார் சஞ்சய். பரிசோதனை முடிந்த பிறகு, சென்னை செல் லும் விமானத்தில் ஏறிவிட்டார்.இதற்கிடையில், தனது மொபைல் போன் பறிபோனதை உணர்ந்த பூரி, உடனடியாக பாலம் ஏர்போர்ட் பாதுகாப்பு போலீசாரிடம் புகார் தந்தார்.
ஏர்போர்ட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப் பட்டிருக்கின்றன. பூரியிடமிருந்து சஞ்சய், மொபைல்போனைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து சென்னை ஏர்போர்ட் அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர் பாலம் அதிகாரிகள்.சென்னையிலிருந்து சஞ்சய் திரும்பிய உடன் அவரைக் கைது செய்து விசாரித்தனர். முதலில் மறுத்த சஞ்சய், கேமராவின் பதிவைப் போலீசார் காட்டியவுடன் திருடியதை ஒப்புக் கொண்டார். "ஏன் இப்படி செய்தீர் கள்?' என்று போலீசார் கேட்டதற்கு, "நான் திருட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எடுக்கவில்லை' என்றார்.
Saturday, November 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment