Pages

Sunday, November 1, 2009

அனிமேஷன் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்.

இந்தியில் பிரபல நட்சத்திரங்களை வைத்து அனிமேஷன் படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் அனிமேஷன் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். தீய சக்திகளை வென்று நல்லதை நிலைநாட்டும் கேரக்டராக இந்த அனிமேஷன் படத்தில் நடிக்கிறார் அமிதாப் பச்சன். இயக்குனர் பிரியதர்ஷன் இந்த முழு நீள அனிமேஷன் படத்தை இயக்குகிறார். டுவினெர்ஜி என்று இப்படத்திற்குப் பெயரிட்டுள்ளார் பிரியதர்ஷன். தனது கேரக்டருக்கு தானே குரல் கொடுக்கவும் செய்கிறார் அமிதாப் பச்சன். பிரியதர்ஷனுக்கு இது முதல் அனிமேஷன் படம். இந்தப் படத்தை அமிதாப் பச்சனின் ஏபி கார்ப்பரேஷன் நிறுவனமும், டூன்ஸ் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. ரூ.20 கோடி மதிப்பீட்டில் இந்த படம் உருவாகிறது. டூன்ஸ் ஸ்டுடியோவின் டெக்னோபார்க்கில், படத்திற்கு முந்தைய பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக டூன்ஸ் அனிமேஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment