
Sunday, November 1, 2009
திரையுலகம் சற்று முரட்டுத்தனமானது
திரையுலகம் சற்று முரட்டுத்தனமானது, கரடு முரடானது. இதை சமாளிக்க தனி தைரியம், திறமை நிச்சயம் வேண்டும். இங்கு ஏமாற்றுக்காரர்கள் அதிகம். அவர்களிடம் சிக்காமல் தப்புவதே ஒரு கலையாகும். ஆனால் இதெல்லாம் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்குத் தான். நான் பதினேழு வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். சினிமாவின் சகலமும் எனக்கு அத்துப்படி. எதை எப்படி கையாள வேண்டும் என்ற தந்திரம் எனக்குத் தெரியும். சினிமாவிலேயே வளர்ந்தேன், இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். 12வது படித்தபோது சினிமாவுக்கு வந்தேன். ஆகவே எனது வாழ்க்கையின் பெரும் பகுதி சினிமாவில்தான் கழிந்துள்ளது. எனக்கு சினிமாவை விட்டால் வேறு எதுவுமே தெரியாது. இதைத் தவிர வேறு என்ன வேலை தெரியும் என்றால் நிச்சயம் என்னிடம் பதில் இல்லை என்கிறார் பிரியங்கா.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment