
Sunday, November 1, 2009
இரண்டாவது மனைவியை ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், லண்டன் தொழிலதிபர் ராஜ்குந்தராவுக்கும் திருமண நிச்சதார்த்தம் நடந்தது. லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குந்தரா நீண்ட காலமாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்தாலும் அவரது காதலுக்கு மதிப்பளித்து ஷில்பாவும் ராஜ்குந்த்ராவை காதலிக்கத் தொடங்கினார். இதனால் தனது முதல் மனைவியை ஓரம் கட்டிய ராஜ்குந்த்ரா ஷில்பாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ஷில்பாவுக்கும், ராஜ்குந்த்ராவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment