Pages

Sunday, November 1, 2009

அசின் இந்தியில் நடித்துள்ள 2வது படம் லண்டன் ட்ரீம்ஸ்.

அசின் இந்தியில் நடித்துள்ள 2வது படம் லண்டன் ட்ரீம்ஸ். ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகனாக சல்மான்கான் நடித்திருக்கிறார். அசின் இந்தியில் நடித்த முதல் படமான கஜினி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் இப்படத்தினை திரையிட 230 பிரிண்ட்கள் போட்டிருக்கிறார்களாம். மும்பையில் நாளை (29ம்தேதி) ரீலிஸ் ஆகவுள்ள லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்காக இப்போதே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த படம் லண்டன் மற்றும் அரபு நாடுகளில் நாளையும், வடஅமெரிக்கா, கனடா, ஜெர்மனி, நார்வே, சுவிட்சர்லாந்து, கிழக்கு ஆப்ரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், பாகிஸ்தான், பிஜி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நாளை மறுதினமும் (30ம்தேதி) ரீலிஸ் ஆகவிருக்கிறது.

No comments:

Post a Comment