Pages

Wednesday, November 11, 2009

நாகார்ஜுனா நில மோசடி ?


பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. இவர் தமிழில் ரட்சகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா நடித்து வெற்றிகரமாக ஓடிய இதயத்தை திருடாதே, உதயம் ஆகிய படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. நடிகை அமலாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நாகார்ஜுனா மீது நில மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது. மாதாபூரில் குருகுல் அறக்கட்டளைக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை நாகார்ஜுனா ஆக்கிரமித்து விட்டதாக தெலுங்கு தேச எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

நாகார்ஜுனா தற்போது லோக்சத்தா என்ற கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அக்கட்சியின் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் இந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் மவுனமாக இருப்பதாகவும், ரேவந்த் கண்டித்துள்ளார்.

அவருடைய பெயரையும் கட்சிப்பெயரையும் பயன்படுத்தியே 16 ஏக்கர் நிலத்தை சுருட்டிக்கொண்டதாகவும் குறைகூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு நாகார்ஜுனா இன்னும் பதில் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment