Pages

Wednesday, November 18, 2009

அந்தமான் தீவுகளுக்கு இலங்கை உரிமை

அந்தமான் தீவுகளுக்கு இலங்கை உரிமை கொண்டாடியதாக வெளியான தகவலை, அந்நாட்டின் வெளி யுறவு அமைச்சர் பொகல்ல காமா மறுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை பார்லிமென்டில் அவர்கூறியதாவது: இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் தீவுகளுக்கோ அல்லது வேறு தீவுகளுக்கோ உரிமை கொண்டாடப் போவதாக நாங் கள் ஒரு போதும் சொன்னதில்லை. கடல் சட்டம் தொடர்பான ஐ.நா., மாநாட்டின் அடிப்படையில்,கடல் படுகை உரிமை களை மட்டுமே கோரியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பொகல்ல காமா கூறினார்.

No comments:

Post a Comment