
கடந்த ஜூலையில் இருந்து இதுவரை 30க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இன வெறியர் களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.கடந்தாண்டு ஜூலையில், ஆஸ்திரேலியா வின் வில்லியம்ஸ்டவுன் என்ற பகுதியில், பார்க் ஒன்றில் முகேஷ் ஹய்கெர்வால் என்ற இந்திய டாக்டர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று ஆஸ்திரேலியர்கள்,அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.
கையில் வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் முகேஷை கடுமையாக தாக்கி, காயப்படுத்தினர். இதில், முகேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது தொடர்பாக, ஆல்டர் அஜோப்பர்டி, மைக்கேல் பால்டாசிஸ், சென் கபிரியேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்த வழக்கு, விக்டோரியா கவுண்டி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. டாக்டர் முகேசின் தலையில் பேஸ்பால் மட்டையால், பலமாக தாக்கிய அஜோப்பர்டி க்கு அதிகபட்சம் 18 ஆண்டுகள் முதல், குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மைக்கேல் பால்டாசிசுக்கு 16ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பத்தாண்டு சிறைத் தண்டனையை அனுப வித்த பின்புதான், இவர் பரோலில் வெளிவர முடியும்.
மற்றொரு குற்றவாளி சென் கபிரி யேலுக்கு ஒன்பது ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜோ குலாச்சி கூறுகை யில்,இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கோழைத் தனமானது. வெறுக்கத் தக்கதும் கூட. ஒரு பொது இடத்தில் வைத்து இந்த தாக்குதல் நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முகேசை பார்த்த உடனேயே, மூன்று பேரும் அவரை தாக்கியுள்ளனர். மூன்று பேருமே உள் நோக்கத்துடன் தான், அவரை தாக்கியுள்ளனர்'என்றார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட முகேஷ் கூறுகையில்,"இனவெறியோடு தாக்குதலில் ஈடுபடுவோருக்கு, இந்த தீர்ப்பு ஒரு நல்ல பாடமாக அமையும் 'என்றார்.
No comments:
Post a Comment