Pages

Wednesday, November 18, 2009

ஆஸ்திரேலிய ராணுவ மோப்ப நாய்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காணாமல் போன ஆஸ்திரேலிய ராணுவ மோப்ப நாய், ஓராண்டுக்கு பின் மீண்டும் திரும்பியது.ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கன்., ராணுவத்துக்கு துணையாக அமெரிக்க, ஆஸ்திரேலிய படைகள் குவிக்கப்பட்டன.


ஆஸி., ராணுவத்தை சேர்ந்த 1500 வீரர்கள் ஆப்கன் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தும், தலிபான்களை எதிர்த்து போரிட்டும் வந்தனர். இந்த படையில் மோப்ப நாய் பிரிவும் பங்கேற்றது.கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் உருஸ்கான் மாநில எல்லையில் ஆஸி., படைவீரர்கள் ஆப்கன் வீரர்களுடன் சேர்ந்து பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டனர். போர் முனையில் ஈடுபடுத்தப் பட்டிருந்த மோப்ப நாய் பிரிவில் இருந்த சபீ என்ற நாய் காணாமல் போய் விட்டது.பல மாதங்களாக எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை.


சபீ பற்றி எந்த தகவலும் நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்து வந்தது. சபீ தலிபான்கள் பிடியில் சிக்கி இருக்கும் என்று நம்பப்பட்டது.இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க படையினர் தலிபான்களை கண்டுபிடிக்கும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாநில எல்லைக்குட்பட்ட மறைவான இடத்தில் சபீயை அமெரிக்க வீரர் ஒருவர் கண்டுபிடித்தார். பின்னர் ஆஸி., படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.


கடந்த வாரம் ஆஸி., பிரதமர் கெவீன் ரட் அங்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சபீயை பார்த்து வியந்த அவர் அதனுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். மோப்ப நாய் சபீ பற்றி ஆஸி., படைத் தளபதி பிரையன் டேவ்ஸன் கூறுகையில், "சபீ காணாமல் போய் 14 மாதங்கள் ஆகிறது. அதற்கு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. தற்போது அது நலமாக இருப்பதை பார்க்கும் போது, யாருடைய பராமரிப்பிலாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது' என்றார்.

No comments:

Post a Comment