""நம் நாட்டுக்கு சுதந்திரம் பெறுவது எப்படி என ஆளாளுக்கு ஒரு போராட்டம், வியூகம் அமைத்தார்கள். ஆனால் காந்தியடிகளின் கணக்கு வேறாக இருந்தது. எல்லோரும் வன்முறை, அடிதடி, போர் என சிந்தித்தபோது காந்தி உண்ணாவிரதம், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் என அகிம்சை வழியில் சிந்தித்தார். அதற்குத்தான் வெற்றி கிடைத்தது.
அதுபோல இந்தப் படத்தில், நம் நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னைக்கு காந்தி வழியில் சிந்தித்து, சாந்தி வழியில் தீர்வு காண்கிறான் நாயகன். அதனால்தான் இந்த டைட்டிலை வைத்திருக்கிறோம். சென்னை, ஊட்டி, கோவா, கேரளம் ஆகிய இடங்களிலும் லண்டன் நகரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது'' என்றார் இயக்குநர் சம்பத் ஆறுமுகம்.
No comments:
Post a Comment