Pages

Tuesday, November 10, 2009

ஆப்கானிஸ்தானில் சிங்கப்பூர் படை

ஆப்கானிஸ்தான் சென்றுள்ள சிங்கப்பூர் ஆயுதப் படையினரைச் சந்திக்க துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் கடந்த வாரம் அங்கு சென்றிருந்தார்.
ஒருஸ்கான், பமியான் மாநிலங்களில் உதவி வரும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் 17 பேர் கொண்ட ரேடார் குழுவை அவர் கண்டு பேசினார். அவர்கள் கடந்த இரு மாதங்களாக அங்கு பணிபுரிகின்றனர். ஆப்கான¬ஸ்தானிலும் அனைத்துலகப் பாதுகாப்பில் சிங்கப்பூரின் பங்களிப்பிலும் அந்த வீரர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் டரின் கௌட்டில் இயங்கி வரும் 20 பேர் கொண்ட இராணுவ மருத்துவக் குழுவையும் அவர் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment