ஆண்டு விடுப்பு, ஓய்வு நாள் மற்றும் இதர சலுகைகள் உட்பட வேலை வாய்ப்புச் சட்டத்தின்படி கொடுக்க வேண்டிய சலுகைகளைக் கொடுக்கத் தவறியதால் ஐவர் குற்றம் சாட்டப்பட்ட னர் என்று மனித வள அமைச்சு கூறியது.
ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காத குற்றத்தின் பேரில் மேலும் இருவர் குற்றம் சாட்டப்பட்டனர்.
சட்டத்தை மீறியதற்காகவும் ஒரு முதலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிறுவனமான லியான் செங் காண்ட்ராக்டு மற்றும் அதன் இயக்குநர் செர் பெங் ஹோ மீது நிறுவனத்தின் நான்கு ஊழியர்களுக்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டு விடுப்பை வழங்கத் தவறியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் மூன்று ஊழியர்களின் சம்பளத்தை சட்ட விரோதமான முறையில் நிறுவனம் குறைத்துள்ளது
நிறுவனம், செர் பெங் ஹோ இருவரும் 15 குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
நிறுவனத்திற்கு $8,500 அபராதமும் செர் பெங் ஹோவுக்கு $5,500 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பின் மேலும் 16 குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த ஜனவரி முதல் வேலை வாய்ப்புச் சட்டத்தின் கீழ் 20 நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு கூறியது.
முஸ்தபாவின் சேமிப்பு கிடங்கை சில்லறை விற்பனை மையமாகப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உறுப்பினராகச் சேர நேற்று ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
காலாங் புடிங் ரோட்டிலுள்ள முஸ்தபா சென்டரின் சேமிப்புக் கிடங்கை விற்பனை மையமாகப் பயன்படுத்துவது குறித்து நகர மறுசீரமைப்பு வாரியம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
வழக்குப் பத்திரங்களை முஸ்தபா நிறுவனத்திற்கு மன்றம் அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.
அண்மைக் காலம் வரை சிறப்பு மலிவு விற்பனைகளுக்கு மட்டுமே கிடங்கு பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக அங்கு சில்லறை விற்பனை நடைபெற்றதை அடுத்து போட்டி விற்பனையாளர்கள் புகார் தொடுத்துள்ளனர் என்று பிஸினஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
“கிடங்கு சில்லறை வர்த்தக நிலையமாக செயல்படவில்லை. பல்வேறு பணம் செலுத்து முறைகளை ஆராய்வதற்கான இந்த அறிமுகத் திட்டத்தில் உறுப்பினர்கள் மட்டுமே பொருள் வாங்க முடியும்,” என்று திரு முஸ்தாக் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ நாளிதழிடம் கூறினார்.
எனினும் இந்த விற்பனை வர்த்தக நடவடிக்கையாகவே கருதப்படும் என்று நகர மறுசீரமைப்பு வாரியம் கூறியுள்ளது.
திட்டச் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றம் இழைத்தால் அவருக்கு அதிகபட்சமாக $200,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
காலாங் புடிங் ரோட்டில் உள்ள சொந்த இடத்தில் 58,400 சதுர அடியில் சேமிப்புக் கிடங்கை நகர சீரமைப்பு வாரியத்தின் அனுமதியுடன் முஸ்தபா கட்டியது.
கிடங்கை வீட்டுப் பொருட்களுக்கான மொத்த விற்பனை நிலையமாக மாற்ற 2004ம் ஆண்டில் முஸ்தபா அனுமதி கேட்டிருந்ததாகவும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
No comments:
Post a Comment