Pages

Saturday, November 7, 2009

மகதீரா

தெலுங்கில் ராம்சரண் தேஜா - காஜல் அகர்வால் நடித்து சக்கை போடு போடும் மகதீரா படம் தமிழிலும் உருவாகி வருகிறது. பூர்வ ஜென்மத்தில் நிறைவேறாத காதல் கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் வில்லனாக தேவ் கில் நடித்துள்ளார். இவர்தான் விஜய்யின் சுறா படத்தில் வில்லனாக நடிக்கிறார். மகதீரா படத்தை தமிழில் உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல் பாதி படம் கலகலப்பூட்டும் வகையில் தமிழில் மீண்டும் படமாக்கப்படுகிறது. பின் பாதி பகுதி தெலுங்கில் இருந்து அப்படியே டப் செய்யப்படுகிறது. பொங்கலுக்கு ரீலிஸ் செய்யும் திட்டத்துடன் இப்படத்தை வளர்ந்து வருகிறார்களாம். அப்போ பொங்கலுக்கு விஜய்யின் வேட்டைக்காரன், அஜித்தின் அசல், கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுடன் மகதீராவும் போட்டி ‌போடப்போகிறது.

No comments:

Post a Comment