Pages

Saturday, November 7, 2009

மூன்று நாள் மரத்தில் தொங்கிய முதியவர்

ஹனோய்
வியட்னாமைத் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 69 வயதான முதியவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
பான் சுக் என்ற அவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் அவரால் ஆற்று நீரைக் கடக்க முடியவில்லை.Hanoi city
ஒரு மரத்தின் கிளைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கியவண்ணம் அவர் மூன்று இரவுகள் மற்றும் இரண்டு நாட்களைக் கழித்திருக்கிறார்.
அவரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. கடைசியில் ராணுவ வீரர் ஒருவர் ஒரு கம்பி மூலம் அந்த ஆற்றில் இறங்கி, அந்த முதியவர் இருந்த இடத்திற்கு நீந்திக் சென்று அவரை பத்திரமாக மீட்டதாக தகவல்கள் கூறின.
மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டது அதிசயமே என்று அவரை பத்திரமாக மீட்டு வந்த ராணுவ வீரர் லெப்டினன்ட் டுக் வின் கூறினார். வியட்னாமைத் தாக்கிய சூறாவளியிலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் சிக்கி அங்கு குறைந்தது 108 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறின.

No comments:

Post a Comment