Pages

Saturday, November 7, 2009

மலேசியா செய்தி

கோலாலம்பூர்

மலேசியாவில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் அடித்துத் தாக்கப்பட்டார்.
கோலாலம்பூரில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில் சென்ற வாரம் குத்துச் சண்டை வீரர் பி. பிரபாகரனை 20 பேர் சேர்ந்து அடித்து காயப்படுத்தியதாக பெர்னாமா தகவல் கூறியது. அதனால் தனக்கு 50 தையல்கள் போட வேண்டியதாயிற்கு என்று பிரபாகரன் சொன்னார்.
“கறுப்பு நிற உடை அணிந்திருந்த அக்கும்பல் உறுப்பினர்கள் இந்த நிலையில் எப்படி தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறாய்,” என்று கூறிக்கொண்டே தன்னை அடித்ததாக பிரபாகரன் தெரிவித்தார். அப்போட்டியில் பங்கேற்க தான் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பொறாமை கொண்ட சிலர் தன்னைத் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment