சென்னை அசோக்நகர் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, மகன் சூரஜ்குமார் ஆகிய 2 பேரையும் மர்ம ஆசாமிகள் கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கொலை வழக்கு தொடர்பாக வேல்முருகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே துப்பறியும் நிறுவன அதிகாரி வரதராஜன் என்பவர் போலீசாரிடம் சி.டி. ஒன்றை கொடுத்தார். அதில் கிருஷ்ணகுமார் என்பவர் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். உண்மையான கொலையாளிகள் வேல்முருகன் அல்ல என்றும், செந்தில்குமார் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. கொலையாளிகள் பயன் படுத்திய ஆயுதம் ஸ்குருடிரைவர் மட்டும். கொள்ளையடித்த நகைகள் சேட்டு கடையில் அடகு வைக்கப்பட்டுள்ளது. மீட்கவில்லை என்பது உள்ளிட்ட பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வழக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக ஒருவரை கைது செய்த போலீசார் வரதராஜனை கைது செய்ய தேடினர். அவர் முன்ஜாமீன் கேட்ட மனுவுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதந்திரம், போலீசார் இரட்டை கொலை வழக்கை சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தீர்ப்பை கேட்டு சென்னை போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:-
அசோக்நகர் இரட்டை கொலை வழக்கு விசாரணையை பொறுத்த வரை போலீசார் முழுமையாக திறந்த மனத்தோடு செயல் படுத்தி உள்ளனர். கேஸ் டைரியை முழுவதுமாக படித்து பார்த்தால் உண்மை புரியும்.
சி.டி.யில் வாக்குமூலம் அளித்த நபரிடமும், அவர் கூறிய நண்பர் செந்தில் குமாரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். அவர்களுக்கு தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது. அடகு கடையில் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகுமார் 2 முறை அவரது செல்போனை ரூ.100-க்கும், ரூ.150-க்கும் அடகு வைத்து மீட்டு சென்றுள்ளார். மற்றபடி அவர் எந்த நகையையும் அடகு வைக்கவில்லை.
கொலைக்கு பயன்படுத்திய கருவி குறித்தும் முழு விவரம் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி போலீசார் விசாரணையை முழுமையாக நடத்தவில்லை என்று கூறியுள்ளது. எனவே இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் மேல் முறையீடு அப்பீல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment