
இந்திரவிழா படத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த ஹேமமாலினி தற்போது நான் அவன் இல்லை-2 மற்றும் குருசிஷ்யன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இனி மேல் எனது உண்மையான பெயரான ஸ்ருதி பிரகாஷ் என்ற பெயரிலேயே நடிக்கப்போவதாக கூறும் ஹேமமாலினி பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து கூறியதாவது:-
எனது உண்மையான பெயர் ஸ்ருதி பிரகாஷ். சினிமாவுக்காக டைரக்டர் ராஜேஷ்வர் தான் எனது பெயரை ஹேமமாலினி என மாற்றினார். ஆனால் இனி மேல் எனது ஒரிஜினல் பெயரிலேயே நடிப்பேன். எனது அம்மா அத்லெட்டிக் பிளேயர். அவருக்கு கராத்தேயும் தெரியும். எனவே நானும் கராத்தே கற்றேன். சிறுவயதிலேயே பரத நாட்டியம், கதக்நடனம் கற்றேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே ஆக்டிங் கோர்சில் சேர்ந்து படித்தேன். இவையெல்லாம் எனக்கு மிகவும் உதவுகிகிறது.
எனது முதல் படம் மராட்டிய படம். தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு டீச்சரை வைத்து தமிழ் கற்றேன். இன்னும் 2 மாதத்தில் தெளிவாக தமிழ் பேசி விடுவேன். என் திறமையை மட்டும் நம்பிதான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கிடைத்த கேரக்டரை சிறப்பாக செய்ய நினைக்கிறேன். என்றாலும் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
முதல் படத்தில் கவர்ச்சியாக கேரக்டர் கிடைத்தது. அதனால் அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்தேன். கதைக்கு தேவையானால் கர்ச்சியாக நடிப்பேன்.
No comments:
Post a Comment