Pages

Monday, November 16, 2009

டேடிங் பற்றி சுஷ்மிதா சென்


அமைதியான அழகுப்பெண் சுஷ்மிதா சென். ஆர்ப்பாட்டமில்லாத தன்மை எப்போதும் இந்தப் பிரபஞ்ச அழகியின் வார்த்தைகளில் வெளிப்படும். சுஷ்மிதாவுடன் ஒரு கலகல உரையாடல்

"சற்று நீண்டகாலமாக நீங்கள் அமைதி காப்பது போல் தெரிகிறதே?'

"சுஷ்மிதா வளர்ந்து விட்டாள்! நம்ப முடியவில்லை அல்லவா! கொஞ்சம் பயணம் மேற்கொண்டிருந்தேன். சில படங்களை முடித்துக் கொண்டிருந்தேன். `நோ பிராப்ளம்' என்று பெயர் சூட்டப்பட்ட படத்தைத் தொடங்கியிருக்கிறேன். அதை அனீஸ் பஸ்மி இயக்குகிறார். படங்கள் தவிர, நான் தொடங்கியிருக்கிற நிறுவனத்தாலும் பரபரப்பாக இருக்கிறேன். இது நான் எனது வாழ்க்கையை மறுஅமைப்புச் செய்துகொள்வதற்கான நேரம். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். நான் நடித்த சில படங்கள் `ஹிட்' ஆகியிருக்கின்றன. பல படங்கள் கவிழ்ந்திருக்கின்றன. இப்போது நான் எதை விரும்புவது? வர்த்தகரீதியான படங்கள் தயாரிப்பதுதான் எனது விருப்பம் என்று முடிவு செய்தேன். இப்படிப் பல வேலைகள் இருக்கின்றன. எனவேதான் பேட்டி கொடுப்பதையெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஒத்தி வைக்கலாம் என்று நினைத்தேன் "

"நீங்கள் உங்களின் வாழ்க்கையை மறு அமைப்புச் செய்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். தனிப்பட்ட விதத்திலா? தொழில் ரீதியிலா?"

"எனது தொழில்முறை வாழ்க்கையானது இதைப் போன்றது. (கைகளை விரித்துக் காட்டுகிறார்.) அது தற்போது இவ்வாறு ஆக்கப்பட்டுள்ளது. (சில ஒழுங்குகளைச் செய்திருக்கிறேன் என்பதைப் போல செங்குத்தாக கைகளால் சைகை செய்கிறார்.) முப்பதைத் தாண்டும்போது சில விஷயங்களை அடைய முடிகிறது. அது அற்புதமாக இருக்கிறது. அப்போதுதான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேலுமë தெளிவாகப் பார்க்கிறீர்கள். எனது தொழில்முறை வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவது என்பது தனிப்பட்ட வாழ்க்கையையும் சீர்ப்படுத்துவதாகத்தான் ஆகும் "

"கமலஹாசனுடன் நீங்கள் `மர்மயோகி' படத்தில் நடிப்பதாகச் செய்திகள் வெளிவந்தனவே...?"

"ஆமாம். ஆனால் கமல் அந்தப் படத்தை இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவர் அந்தப் படத்துக்கு முழுமையாகத் தயாராகிவிட்டார். சில காரணங்களால் அதைத் தள்ளி வைத்திருக்கிறார். அவர் எப்போது அந்தப் படத்தை உருவாக்கினாலும் நான் அதில் இருப்பேன்'

"உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விகளைக் கேட்கலாமா?'

"வேண்டாம். வழக்கமாக பத்திரிகையாளர்கள், தனிப்பட்ட கேள்விகளை பேட்டியின் முடிவில் கேட்டுத்தான் எனக்குப் பழக்கம். ஆரம்பத்தில் அவர்கள் மிகவும் இதமாக, தன்மையாக, நட்பாக கேள்விகளைத் தொடங்குவார்கள் .திடீரென்று ஒரு கட்டத்தில், `சரி, என்னுடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிவிட்டீர்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிச் சொல்லுங்களேன்' என்று ஆரம்பிப்பார்கள்"


"சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியே `டேட்டிங்' வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குநர் கரண் ஜோகர் கூறியிருக்கிறாரே?"

"கரண் உண்மையில் என்னைச் சந்திக்கவில்லை (சிரிக்கிறார்.) இதற்கும் திரைத்துறைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் எல்லைகளை விரிவாக்கும்போது இயல்பாகவே புதிய விஷயங்களைக் கண்டடைவீர்கள். எனவே இது உண்மையிலேயே உங்களைப் பொறுத்தது. தொழிலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை "

"`டேட்டிங்' பற்றி பேசுகிறோம்... சரி, நீங்கள் யாருடன் தற்போது `டேட்டிங்' சென்று கொண்டிருக்கிறீர்கள்?"

'இதுதான் கடைசிக் கேள்வியா? (புன்னகைக்கிறார்). நான் தற்போது ஒற்றை நபர்தான். ஆனால் அது நான் வாழ்க்கையைக் காதலிப்பதைத் தடுக்காது. பேசும்படி யாராவது ஆண் தொடர்பு ஏற்பட்டால் அதை முதலில் உங்களிடம்தான் கூறுவேன். இப்போது அடுத்த கேள்விக்குப் போகலாமே!"

"நீங்கள் உங்களின் முன்னாள் காதலருடன் நட்பாக இருப்பது கஷ்டமாக இருக்கிறதா?"

"எல்லா முன்னாள் காதலர்களும் ஒரே மாதிரியில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள், வித்தியாசமாகச் செயல்படுபவர்கள். நான் அவர் நண்பராக இருக்க வேண்டும் என்று நினைத்து அதன்படி நடந்தால் அவர் அவ்வாறு இருப்பார். அப்படி நடந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன் "

"சுஷ்மிதாவைப் பற்றி மற்றவர்கள் அறியாத ஐந்து விஷயங்கள்??

1. நான் பட்டினி கிடந்து சாகாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் கூட சமைக்க மாட்டேன்.

2. நான் நடிகையாக விரும்பியதே இல்லை.

3. பதினெட்டு வயதாகும்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

4. மற்றவர்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு `கனவு இல்லத்தை' நான் எனது மனதில் வைத்திருக்கிறேன். அதை நான் அடைவேன் என்று நம்புகிறேன்.

5. ஆன்மிக உணர்வு எனக்கு அதிகம் உண்டு. ஆனால் மதத்துக்கும் எனக்கும் தொலைதூரம்.

- தமிழில் : சிதி எமிலியா , சிங்கப்பூர் .

No comments:

Post a Comment