
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்கு பகுதியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் பெருமளவில் நடந்து வந்தது. கடந்த 19 வருடங்களுக்கு முன்பு அதாவது 1990-ம் ஆண்டுகளில் இச்சம்பவம் நடைபெற தொடங்கியது.
டல்விச், ஆர்லிங்டன், நார்வுட், டவுன்ஹாம், லீ, வெஸ்ட்விகாம், பிக்லி ஆகிய இடங்களில் தொடர்ந்து இக்குற்றங்கள் நடைபெற்றன. இது போலீசாருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து “செக்ஸ்” குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக 29 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிரமான கண்காணிப்பும் நடைபெற்றது.
இந்த நிலையில் 52 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் வெளியிடப்படவில்லை. கொள்ளையடிக்கும்போது வீட்டில் இருப்பவர்களை தாக்கியும், பெண்களையும் கற்பழித்து வந்தான்.
கடந்த 19 வருடங்களில் இவன் மீது 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment