இவர், விமானப் படையில் பயிற்சி பெற்று வருகிறார். விடுமுறை நாட்களில் தன்னுடன் பயிற்சி பெறும் நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு சென்று, பீர் அருந்தி மகிழ்ச்சியாக இருப்பது அவரது வழக்கம். சமீபத்தில், ஸ்டீவனேஜ் என்ற இடத்தில் உள்ள மது பான விடுதிக்கு, தனது நண்பர்கள் சிலருடன் இளவரசர் ஹாரி சென்றார். அங்கு பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக இருக்கும் பென்னட் என்பவரும் மது அருந்திக் கொண்டிருந்தார்.அவர் இளவரசர் ஹாரியின் தீவிர அபிமானி. மதுபான விடுதியில் இளவரசரை கண்டதும், அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வேகமாக அவர் அருகில் சென்று,"நான் உங்கள் தீவிர ரசிகன். உங்களை சந்தித்து பேச வேண்டும் என்பது என் கனவு. என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டால், உங்களுக்கு பிடித்த பீர் பாட்டிலை பரிசாக அளிப்பேன்' என்றார்.
இதைக் கேட்ட இளவரசர் ஹாரி, எந்தவித தயக்கமும் இல்லாமல், பென்னட்டின் தோள் மீது கையைப் போட்டு, அணைத்துக் கொண்டார். பின்னர், பென்னட்டின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டார்.பிரிட்டன் இளவரசர், சாதாரண மனிதனான தன் கன்னத்தில் முத்தமிட்டதை நினைத்து, பென்னட் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டார்.

இதுகுறித்து பென்னட் கூறியதாவது:இளவரசர் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டதை, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் வாழ்க்கையின் மிகச் சிறந்த நேரம் இது. இதை மறக்கவே முடியாது. என் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. இளவரசர் முத்தமிட்டதற்காக, ஒரு மாதமாக முகத்தை கழுவாமல் இருந்தேன். இவ்வாறு பென்னட் கூறினார்.
No comments:
Post a Comment