அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சீனாவின் பல்வேறு நகரங்களில் ஆய்வு நடத்தியது. அந்நாட்டின் 'பிளாக் ஜெயில்' என அழைக்கப்படும் ரகசிய சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த 38 பேரிடமும் பேட்டி கண்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள் ளது.இதுகுறித்து, அந்த அமைப்பு கடந்த வியாழனன்று வெளியிட்ட அறிக்கை:சீன அரசுக்கு சொந்தமான ஓட்டல்கள், மருத்துவமனைகள், மனநல காப்பகங்கள் ஆகிய இடங்களில், இந்த ரகசிய சிறைகள் செயல்படுகின்றன.
நிலங்களை அபகரித்தல் முதல் போலீசாரின் தவறான நடத்தை வரை, தங்கள் குறைகளை அரசு உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க முயலும் மக்களை பாதுகாப்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏஜன்ட்கள் ஆகியோர், இத்தகைய ரகசிய சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர்.இவ்வாறு ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் தங்களை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், சிலர் தங்களை பாலியல் ரீதியாக அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். இதில், பதினெட்டு வயது பூர்த்தியாகாதவர்களும் அடங்குவர்.

இந்த ரகசிய சிறைகளை மூடவும், அதை நடத்துபவர்கள் பற்றி விசாரணை நடத்தவும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்கள் குறைகளை தெரிவிக்க பெரிய நகரங்களுக்கு செல்லும் மக்களை கைது செய்து, ரகசிய சிறைகளில் அடைத்து சித்ரவதை செய்து பின் விடுவிக்க, உள்ளூர் அதிகாரிகளே இத்தகைய சிறைகளை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment