Pages

Tuesday, November 10, 2009

சீனா அதிருப்தி

அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு செல்ல திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது அதிருப்தி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கக்கோரி, புத்தமதத் தலைவர் தலாய் லாமா போராடி வருகிறார்.

சீனாவில் இருந்து 1959ம் ஆண்டு தப்பி வந்த தலாய் லாமா, பல ஆண்டுகளாக இமாச்சல பிரதேசத்தில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசும் இவர் பெற்றுள்ளார். இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எல்லையால் இந்திய - சீன உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய புத்த மடாலயத்துக்கு தலாய் லாமா நேற்று சென்றார். இதற்காக அங்குள்ள புத்த துறவிகள், தலாய் லாமாவுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். தலாய் லாமாவை சீனா, பிரிவினைவாத தலைவராக கருதுகிறது. இந்நிலையில், அவரை அருணாச்சல பிரதேசத்துக்குள் இந்தியா அனுமதித்தது அதிருப்தி அளிப்பதாக,சீன வெளியுறவுத்துறை அதிகாரி குன் காங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment