
"டான்ஸ் ஷோ 'க்களும் நடத்தியுள்ளார். இவருக்கும், அமெரிக்காவில் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் தீபக் சந்திரசேகருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந் தது. திருமணம் முடிந்ததும், காயத்ரி ரகுராமை அவரது கணவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். இருவருக்கும் இடையே சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை விட்டு பிரிந்து அங்கேயே நடனப் பயிற்சி மையம் ஒன்றை காயத்ரி நடத்தி வந்தார்.
இருவருக்கும் இடையில் சமாதானம் செய்து வைக்க, உறவினர்கள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத காயத்ரி ரகுராம், சென்னை திரும்பி விட்டார். சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில், விவாகரத்து கோரி நடிகை காயத்ரி ரகுராம் மனு தாக்கல் செய்துள்ளார். கணவர் கொடுமைப் படுத்துவதாக கூறி, இந்த விவாகரத்தை கேட்டுள் ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment