Pages

Wednesday, November 11, 2009

திரைப்பட பாடல் "ரிங்டோன்'களுக்கு பயங்கரவாதிகள் தடை

ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் திரைப்பட பாடல் "ரிங்டோன்'களுக்கு பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர். சோமாலியா நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டதால், கடந்த 91ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, இந்த நாட்டில் எந்த ஆட்சியும் நடக்கவில்லை. ஐ.நா.,வின் தலையீட்டில் கடந்த 2000ம் ஆண்டு பார்லிமென்ட் உருவாக்கப்பட்டது.


கடந்த 2003ம் ஆண்டு இந்த பார்லிமென்ட்டும் காலாவதியாகி விட்டது. தற்போது, பெயரளவில் அதிபர் இருக்கிறார். இருப்பினும், அல்-குவைதா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் இந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத் துள்ளனர். ஒரு சில குழுக்கள் கடல் கொள்ளையில் ஈடுபட்டு, பணம் சம்பாதிக்கின்றனர். இன்னும் சிலர் சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். சிலர் போதைப் பொருட்களை கடத்தி ஆயுதங் களை வாங்குகின்றனர்.


இதில், "அல் ஷபாப்' என்ற குழுவினர் தலைநகர் மொகடிஷுவின் தெற்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த பகுதியில் இவர்கள் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். ஆடல், பாடல், விளையாட்டுகள் என எந்த பொழுது போக்கு அம்சங்களும் இப்பகுதியில் இருக்கக்கூடாது, என தடை விதித்துள்ளனர். மொபைல் போனில் திரைப்பட பாடல் கேட்ட இளைஞனை, பொதுமக்கள் முன்னிலையில் கட்டி வைத்து கசையடி கொடுத்துள்ளனர் இந்த பயங்கரவாதிகள். அமெரிக்காவில் வசிக்கும் இந்நாட்டு பெண் ஒருவர், தனது உறவினரை பார்ப்பதற்காக இந்த பகுதிக்குள் வந்த போது இவரது மொபைல் போனில் பாலிவுட் திரைப்படத்தின் மெட்டில் அமைந்த ரிங்டோன் ஒலித்துள்ளது. இதை கேட்ட அல் ஷபாப் அமைப் பினர், மொபைல் போனை பறித்து ரிங்டோனை அழித்துள்ளனர். குரான் வாசகம் அடங்கிய ரிங்டோன் மட்டுமே ஒலிக்க இந்த பகுதியில் அனுமதியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment