வாஷிங்டன்: உலகளவில் 70 கோடி மக்கள், வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. உலகளவில், 135 நாடுகளில், கடந்த 2007 ஆண்டு முதல் இந் தாண்டு வரை ஆய்வு ஒன்று நடத் தப்பட்டது. இதில், உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 70 கோடி மக்கள், தாங்கள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வு தகவல் : ஆப்ரிக்க நாடுகளில், சகாராவை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தொகையில், பெரியவர்களில் 38 சதவீதத்தினர் வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதாவது இப்பகுதியை சேர்ந்த 16.5 கோடி மக்கள் வெளிநாட்டில் குறிப்பாக, அமெரிக்காவில் தங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் மக்கள் சென்று குடியேற நினைக்கும் நாடுகளின் வரிசையில், பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் நிரந்தரமாக தங்க விரும்புவதாக, 4.5 கோடி மக்கள் தெரிவித் துள்ளனர். 3.5 கோடி பேர், ஸ்பெயின் நாட்டிலும், மூன்று கோடி பேர், சவுதி அரேபியாவிலும், 2.5 கோடி மக்கள் ஆஸ்திரேலியாவிலும், தங்க விரும் புவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment