Pages

Sunday, November 22, 2009

சஞ்சய்தத் வெளிநாடு செல்ல அனுமதி ?

வெளிநாட்டில் நடக்கும் சினிமா சூட்டிங்கில் பங்கேற்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. அவர் 2010ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்ப வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரபல இந்தி நடிகரும், சமாஜ்வாடி கட்சியின் பொது செயலாளருமான சஞ்சய் தத், கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். பின்னர் இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் ஆயுத சட்டத்தின் கீழ் அவருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார்.


இந்த நிலையில் சஞ்சய்தத், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு சென்று சினிமா படபிடிப்பை முடித்து கொடுக்க வேண்டியது இருப்பதால், நான் வெளிநாடு சென்று வர நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் சினிமா சூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்குள் அவர் படப்பிடிப்பை முடித்து விட்டு, பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும், என்று தீர்ப்பளித்தார்.

நடிகர் சஞ்சய் தத், நோ ப்ராபளம், ஹேங் ஓவர், டபும் டமால் உள்ளிட்ட 7 படங்களின் சூட்டிங்கிற்காக தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, லண்டன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment