Pages

Sunday, November 22, 2009

நயனதாரா சினேகா இருவருக்கும் சிக்கல் ?

ஆந்திர மக்களுக்கு உதவும் வகையில் வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக நடிகர் பாலகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு நட்சத்திர கலைவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் - நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 7ம்தேதி ஐதராபாத்தில் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் தெலுங்கில் முன்னணி நடிகைகளாக விளங்கும் தமிழ் நடிகைகள் நயன்தாரா, சினேகா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதனால் இவர்கள்
இருவரும் தெலுங்குப் படங்களில் நடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்குப் பட அதிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதையடுத்து நயன்தாரா, சினேகா ஆகியோருக்கு ‌விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்

No comments:

Post a Comment