சென்னை, நவ. 5: இலங்கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாராகும் சிங்கள திரைப்படத்தில் தமிழ் நடிகர் சூர்யா நடிக்கக் கூடாது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிங்கள திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டிருப்பதாக வெளியான செய்தி தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கலைஞர்கள் நாடு, இனம் கடந்தவர்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அண்மையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்து, 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து கொடுமை செய்யும் நாட்டில் சிங்களரால் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் தமிழர் ஒருவர் நடிப்பதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகக் கொடுமையான படுகொலைகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட புறப்பட்ட இந்தியக் குழுவை மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு தடுத்து நிறுத்தியது. எனவே, தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாகாத வகையில் நடிகர் சூர்யா சிங்களப் படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நெடுமாறன் அவர்களே போகிற போக்கை பார்த்தல் நீ நடிச்சது போதும்னு அவங்க அப்பா சிவகுமார் சொன்னாலும் ஆச்சர்யம் இல்லே . இனிமே கோர்ட் மாறி மாறி படி ஏறவே நேரம் சரியாய் இருக்கும் .
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment