புலிகள்- ராணுவம் இறுதிப் போரில் சிக்கிச் சீரழிந்து சின்னபின்னமான வன்னிப் பகுதிக்கு முதல் தடவையாகச் செவ்வாய்க்கிழமை திரு ராஜபக்சே சொன்றார்.
வன்னிப் பகுதியில் மறுகுடியேற்ற, மேம்பாட்டுப் பணிகளை அதிபர் பார்வையிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் தங்கள் இடங்களுக்குச் சென்றுள்ள 1,200 தமிழர்களிடையே அவர் தமிழில் பேசினார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பகுதிக்குச் சென்ற அதிபர், அந்தப் பகுதியில் நடக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகளைக் கண்டார்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டென்மார்க் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்களையும் சந்தித்துப் பணி முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
“நீங்கள் நீண்ட காலமாகப் பட்ட ஏராளமான சிரமங்களை நான் நன்றாக அறிவேன். பயங்கரவாதிகள் உங்களுக்குத் தவறான வழி காட்டினர்.
“அது பெரிய பாவம், அது பெரிய அநியாயம். நீங்கள் மனித கேடயங்களாக பணயக் கைதிகளாக ,இருந்தீர்கள். அந்தக் கசந்த காலம் இனிமேல் இல்லை,” என்று தமிழர்களிடையே பேசிய அதிபர் ராஜபக்சே குறிப்பிட்டார்.
கிளிநொச்சி முல்லைத்தீவில் ராணுவப் படையினரிடையே பேசிய அதிபர், தமிழர்களின் மனதை வெற்றி கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். அவர்களுக்கு உடனடி சம்பளம் உயர்வையும் அறிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையினரின் விசாரணையை எதிர்நோக்கிய இலங்கை கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தாயகம் திருப்பியதாக இலங்கைத் தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்க அதிகாரிகள் அவரை விசாரிக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment