Pages

Friday, November 6, 2009

அமைச்சரவையிலிருந்து விலக மு.க. அழகிரி விரும்புவதாக

வரும் நவம்பர் 19ம் தேதி இந்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சரவையிலிருந்து விலக தமிழக முதல்வரின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திமுக அமைச்சர்களில் சிலர் தங்களுடைய அமைச்சரவையில் சில குறுக்கீடுகள் இருப்பதாகப் புகார் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று தங்களுடைய அமைச்சின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதையும் சில அமைச்சர் விரும்பவில்லை என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையே மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி திமுக வெளியிலிருந்து ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் மு.க. அழகிரி வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது என்று எக்ஸ்பிரஸ் பஸ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.இந்த தகவல் திட்டமிட்டு பரப்படும் செய்தி என அழகிரி வட்டாரங்கள் தெரிவிகின்றனாவாம்,

No comments:

Post a Comment