ஏர்-இந்தியாவின் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு 20 சதவீதமும், உள்நாட்டு பயணத்திற்கு 50 சதவீதமும் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சர்வதேச விமானங்களில், முதல் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்புகளில் பயணம் செய்யும் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள மூத்த குடிமக்களுக்கு ஏர்-இந்தியா நிறுவனம், தனது வழக்கமான கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது.இந்தியாவில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இந்த தள்ளுபடி சலுகையை ஏர் - இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் சர்வதேச விமானங்களில் பெறலாம்.பிற இணைப்பு விமானங்களுக்கு இது பொருந்தாது.
உள்நாட்டு விமானங்களில் எகனாமி வகுப்பில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணம் ஏற்கனவே அமலில் உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment