Pages

Saturday, November 21, 2009

நடிகை ஸ்ரீதேவி பிறந்த ஊரின் பெயர் மாற்றம் ?



சிவகாசிக்கு "நியூமராலஜி'படி கூடுதல் ஆங்கில எழுத்து சேர்க்கக் கோரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அண்மைக்காலமாக சில மாநிலங்களுக்கு "நியூமராலஜி'படி, கூடுதல் எழுத்துக்களை சேர்த்து பெயர் மாற்றம் செய்கின்றனர். இந்த வரிசையில் சிவகாசி நகராட்சியும் சேர்ந்துள்ளது. சிவகாசியில் நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் sivakasi என்பதை sivakaasi என, பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு மாற்றம் செய்தால், நகருக்கு பல நன்மைகள் ஏற்படும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். நகராட்சி கமிஷனர் விஜயராகவன் கூறுகையில், "தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி வைப்போம். அரசு திருப்தி அடைந்தால், கெஜட்டில் அறிவிப்பு வெளியாகும். அதன்பின் "சிவகாசி' என்ற ஆங்கில எழுத்தில் கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்படும்' என்றார்

No comments:

Post a Comment