
ராமேஸ்வரம் கோயிலுக்கு வட மாநில பக்தர் ஒருவர் எட்டு லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக வழங்கினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த லட்சுமிசந்த்,அவரது மகன் மகேந்திரா என இருவரும்சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளனர். நேற்று அமாவாசை என்பதால் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.பின் கோயில் உண்டியலில் தலா 49 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி டி.டி., எட்டு , தலா 49 ஆயிரத்து 100ரூபாய்க்கான வங்கி டி.டி.,10 என எட்டு லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை பரிதாபாத் என்ற பெயரில் நன் கொடையாக செலுத்தினர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலகத்தில் கேட்டபோது,""பக்தர்கள் பெயர்,விலாசம்,முகவரி குறித்து நாங்கள் கருத்துக்கூற முடியாது'' என்றனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சுமிசந்த் இது போன்று நன்கொடை செலுத்துவது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment