( இதுல எவருங்க சிவகுமார் )போலி பாஸ்போர்ட் தயாரித்து, ஓட்டல் ஊழியர்களை வெளிநாட்டிற்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்ட சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் மகன் விடுதலை செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரகுசந்திரன்; ஓட்டல் சரவணபவன் முன்னாள் ஊழியர். கடந்த 2005ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி அமெரிக்கா சென்றார். அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த அமெரிக்க அதிகாரிகள், பாஸ்போர்ட் போலி என்பதை கண்டறிந்தனர். அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர்.
சென்னை விமான நிலையப் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மகன் சிவகுமார் உதவியதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், சிவகுமாரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வழக்கு, ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்தார். போலீஸ் தரப்பில் குற்றம் நிருபிக்கப்படாததால் சிவகுமாரை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment