
கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். லலிதாகுமாரியிடம் இருந்து விவாகரத்து கோரி, சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்தார். ஆனால், பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து, நடிகை லலிதா குமாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குடும்ப நல கோர்ட் நீதிபதி ராமலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. நடிகர் பிரகாஷ் ராஜ், அவரது மனைவி லலிதா குமாரி இருவரும் கவுன்சிலிங் மையத்தில் ஆஜராகினர். இருதரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, "தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க பிரகாஷ் ராஜுக்கு உத்தரவிடக் கோரி' லலிதா குமாரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. குடும்ப நல கோர்ட்டுக்கு பிரகாஷ் ராஜ், அவரது மனைவி லலிதா குமாரி வந்து பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த வாரம் மனு தாக்கல் செய்தனர். இருவரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், பரஸ்பர விவாகரத்து வழங்கி, சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட் நீதிபதி ராமலிங்கம் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment