Pages

Sunday, November 15, 2009

அமெரிக்கா எம் பி பதிமூன்று வருட சிறை ?

அமெரிக்காவில் குடியரசு கட்சி எம்.பி.யாக இருப்பவர் வில்லியம் ஜெப்பர்சன். இவர் லுசியானா மாகாணத்தில் உள்ள நியூஒர்லன்ஸ் பகுதியை சேர்ந்தவர். லஞ்சம் மூலம் பணம் சம்பாதித்தல், கருப்புபணம் பதுக்கி வைத்தல் மற்றும் நேர்மையற்ற முறையில் ஆப்பிரிக்காவில் பல வழிகளில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தல் என இவர் மீது சுமார் 16குற்றங்கள் சுமத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவருக்கு 27வருடங்கள் ஜெயில் தண்டனை வழங்க வேண்டும் என அரசு வக்கீல் வாதிட்டார்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட வில்லியமுக்கு 13வருடங்கள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அமெரிக்கா வரலாற்றில் லஞ்ச ஊழல் வழக்கில் ஒரு எம்.பி.க்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய தண்டனை இது வாகும்.

No comments:

Post a Comment