இந்த ஆய்வு மேல்நிலை வகுப்பு அதாவது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 14முதல் 16வயது வரை உள்ள 10ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்டது.
அவர்களில் 14வயது மாணவர்கள் 47 சதவீதமும், 15 வயது மாணவர்கள் 41 சதவீதமும், 16 வயது மாணவர்கள் 29 சதவீதமும் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்று முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது.
பெரும்பாலும் இவர்கள் செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் மூலம் “சைபர்” குற்றங்களில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு பிடிக்காத நண்பர்களை செல்போன்கள் மற்றும் இண்டர்நெட் மூலமாக மிரட்டுதல், அவமதித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலான “டீன்ஏஜ்” மாணவர்கள் கடுமையான வன்முறை மூலம் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற செயல்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் ஈடுபடுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment