Pages

Sunday, November 22, 2009

சீனாவிற்கு தைவான் நெருக்கடி ?

தைவானை நோக்கி சீனா வைத்துள்ள ஏவுகணைகளை அகற்றுமாறு சீனாவை தைவானியப் பிரதமர் வூ டென் ய~ கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சு நடைபெறவதற்கு வழிவிடும் வகையில் சீனா அதன் ஏவுகணைகளை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு திரு வூ கேட்டுக்கொண்டுள்ளதாக ஐநா தகவல்கள் கூறின.
தைவானுடன் ஆழமான நம்பிக்கையை சீனா ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் திரு வூ வலியுறுத்தியுள்ளார்.
இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் சூழல் இருந்தால் மட்டுமே அமைதிப் பேச்சைத் தொடங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment