
பயங்கரவாதத்துக்கு எதிராக, அமெரிக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரான் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் "அலாவி பவுன்டேஷன்' என்ற அமைப்பினால், அசம்பாவிதம் ஏதும் நடக்கலாம் என்பதால், இந்த அமைப்புக்குச் சொந்தமான மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள 36 அடுக்கு கட்டடத்தையும், நியூயார்க், கலிபோர்னியா, வெர்ஜினியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான மசூதிகளையும், அமெரிக்க அரசு பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. லாப நோக்கமில்லாமல், இஸ்லாமிய கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது என, இந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பு ஏதும் இன்றி, அமெரிக்க அரசு மசூதிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment