
திருச்சி மாவட்டத்தில் 234 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு நாள் 1க்கு ரூ.2கோடி வரை மதுவிற்பனை நடக்கிறது. நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்தது. மழை பெய்ததால் டாஸ்மாக்கில் மது, பீர், விற்பனை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மழையிலும் டாஸ்மாக் விற்பனை குறையவில்லை.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 13 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. இது கடந்த மாத விற்பனையை விட அதிகம்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடிமகன்கள் டாஸ்மாக்கில் புகுந்து விளையாடியதுதான் விற்பனை அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
அதிலும் மழையால் பீர் விற்பனை குறையும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் காஷ்மீர் குளிரிலேயே நாங்க பீர் அடிப்போம்.
வடகிழக்கு பருவ மழையெல்லாம் எங்களுக்கு பொருட்டே இல்லை என பீர் பிரியர்கள் வெளுத்து கட்டி உள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.6 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரம் பீர் விற்பனை ஆகி உள்து. அதே நேரம் பிராந்தி விஸ்கி ரம் ரூ.6 கோடியே 57 லட்சத்து 77ஆயிரத்துக்கு விற்று உள்ளது.
நகர்ப்புறங்களை போன்றே கிராமப்புறங்களிலும் பீர் மோகம் அதிகரித்து விடுவதும், பீர் விற்பனை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.பீர் தட்டுபாடின்றி சப்ளை ஆவதும் புதிய “பீர்” குடி மகன்களும் அதிகரித்து இருப்பதும், விற்பனை அதிகரித்ததற்கு காரணம்.
அதே நேரத்தில் டாஸ்மாக் பீர் விற்பனை அதிகரித்து இருக்கும் தகவல் பல பெற்றோகள் நெஞ்சில் குபீர் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. பாக்கெட் மணியை குறைப்பது, மகன்கள் மீது கண்காணிப்பை பலப்படுத்துவது என்ற முடிவிற்கு பெற்றோர்கள் வந்து உள்ளனர்.
purposefully Indian Government ruining the youngsters. No doubt.I hope still India is following the British law. Without permit they should not sell any liquor to minors.
ReplyDeleteIn Malaysia already Indian boys got ruined by liquors . Now in India its happening. Its politically motivated. keep them in ignorant state not to question about the Government things.
ReplyDelete