Pages

Sunday, November 22, 2009

சுப்ரமனியாய சிவாவின் சாதனை ?

பருத்திவீரன் படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற டைரக்டர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிகை மதுமிதா நடித்திருக்கிறார். சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகளை ஹாலிவுட் தரத்தில் படமாக்கியிருக்கிறார்களாம். யோகி படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் யோகி பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:-

யோகி படத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர், ஒரு பாடலாசிரியர், ஒரு பத்திரிகையாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் அமீர்.


இந்த படம் 100 சதவீதம் முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் அதிகம் காட்டியிருக்காத குடிசைப் பகுதியில் படம் பிடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு சண்டை காட்சிகளுக்காக மட்டும் 52 நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. சண்டை பயிற்சி மாஸ்டர் ராஜசேகர். டூப் இல்லாமல் எல்லா காட்சிகளிலும் அமீரே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

யோகி படத்தின் கதாநாயகி மதுமிதா, முதன் முறையாக சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். கதைப்படி தெலுங்கு கலந்த தமிழ் பேச வேண்டி இருந்ததால் மதுமிதா குரல் பொருத்தமாகி விட்டதாம்.

மொத்தம் 3 பாடல்கள். முதல் முறையாக அமீர் படத்தில் யுவன் பாடியிருக்கிறார். முதல் முறையாக பாடலாசிரியர் சினேகன் பாடல் எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார். மாஸ்டர் தினேஷ் நடனம் அமைத்துள்ளார். 10 நாட்கள் நடனத்திற்கு எடுத்துள்ளனர். எந்தவித நடனப் பயிற்சியும் இல்லாமல் அமீரை ஆட வைத்திருக்கிறார் தினேஷ் மாஸ்டர்.

சென்னையில் நிறைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் சிறப்பு அனுமதி பெற்று படம் பிடித்துள்ளனர். சேஸிங் சீன் மட்டும் மவுண்ட் ரோட்டில், பெரிய ரிஸ்க் எடுத்து படமாக்கியுள்ளார் கேமராமேன் குருதேவ். இந்த காட்சி கண்டிப்பாக பரபரப்பாக பேசப்படும் என்கிறது யோகி யூனிட்.

கஞ்சா கருப்பு, சுவாதி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட 8 பேர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையை சுற்றிய ஸ்லம் பகுதியில் படமாக்கும்போது, கதையின் களம் அதுவானதால், அந்த பகுதியில் வசிக்கக் கூடிய வினோத், ஜூஜூபா போன்றவர்கள் அமீரின் நண்பர்களாக நடித்துள்ளனர். அவர்கள் சொந்தக்குரலில் பாடியும், பேசியும் உள்ளனர்.

யோகிக்காக காஸ்ட்யூம் செலவு அதிகம் இல்லையாம். இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்த உபயோகத்தில் உள்ளவைகளையே பயன்படுத்தியுள்ளனர்.

யோகி படத்திற்கு பூஜை போட்டு இரண்டே கால் ஆண்டுகள் ஆகி விட்டது. நிறைய போராட்டங்களுக்கு பிறகு 165 நாட்கள் சூட்டிங்கை நடத்தியிருக்கிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா.

இந்த படத்தை சென்னையில் அமீரின் டீம் ஒர்க் புரொடக்ஷன் ரீலிஸ் செய்கிறது. மற்ற அனைத்து ஏரியாக்களிலும் நல்ல விலைக்கு விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment