இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக மது கோடாவுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மது கோடா பண பதுக்கலில் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதற்கிடையே, மது கோடாவுக்கு நெருக்கமான மும்பையைச் சேர்ந்த லலித் ஜலான் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகையில்,"லலித் ஜலான் வீட்டில் நடந்த சோதனையில், வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலம் 560 கோடி ரூபாயை, மது கோடா அனுப்பியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில், பெரும்பாலான நிதி, துபாய்க்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. மதுகோடாவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி வைப்பதற்கான நடவடிக்கையும் துவங்கியுள்ளது' என்றனர்.
இதற்கிடையே, சோதனையின்போது மது கோடாவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, ஜார்க்கண்ட் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment