உசிலம்பட்டி பத்திரிகையாளர் ப.மதிவாணன் சார்பாக வக்கீல்கள் ஜே.ஜான் சத்யராஜ், எ.அமுதகவி உசிலம்பட்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு:
சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அக்.,3 ல் நடிகை புவனேஸ்வரி கைதானார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், "டிவி'க்களில் செய்தி வெளியானது. சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக அவர் வாக்குமூலம் அளித்தார். போலீசார் அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த நடிகைகளின் பெயர்கள், அவர்களது போட்டோவுடன் தினமலர் இதழில் செய்தி வெளியானது. இச்செய்தி எவ்வித உள்நோக்கமுமின்றி வெளியிடப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் ராதாரவி அக்.,5 ல் தினமலர் இதழுக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் தந்தார். தினமலர் இதழ் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறினார். இதன் எதிரொலியாக தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். தினமலர் செய்தியை கண்டித்து நடிகர், நடிகைகளின் கண்டன கூட்டம் அக்.,7 ல் விண் "டிவி'யில் ஒளிபரப்பானது. கூட்டத்தில் நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியிருந்தனர்.
ஸ்ரீபிரியா பேசுகையில், "யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தைக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியுள்ளது,' என்றார்.
விஜயகுமார் "செய்தி வந்த தகவல் கிடைச்சதுமே, நேராக பத்திரிகை ஆபீசுக்குள்ளே புகுந்து நாலுபேரையாவது வெட்றதுனு தான் முடிவு பண்ணிணேன்,' என்றார்.சத்யராஜ் " உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,' என்றார்.சூர்யா, " கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதுறாங்கன்னு அவங்க பின்னாடி நாம் ஓடிக்கிட்டு இருக்க முடியாது, ' என்றார்.அருண்விஜய், "பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அதை அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து மஞ்சுளா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன்,' என்றார்.
சரத்குமார், "என்னை பற்றி எழுதினபோது 200 பேரோட போய் அந்த ஆபிசை அட்டாக் செய்தேன்,' என்றார். சேரன், "நடிக்க வரும் பெண்களுக்கும் இதயம் உண்டு என்பதை மறந்து அந்த ராஸ்கல்ஸ்... உன் வீட்டு பிள்ளை ஓடும்போது தெரியும்டா வலி, ' என்றார்.விவேக், " எழுதிய நபர் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவன் ஒரு அப்பன், ஆத்தாவிற்கு பிறந்தவன் என்றால் இங்கே மேடையேறி எழுதியதற்கு ஆதாரம் காட்டட்டும். ஒரு குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள், இப்படி அவதூறாக எழுதும் பத்திரிகைகாரர்கள் அவர்களது மனைவி, மகள்களின் படத்தை எனக்குத் தந்தால் அதை கிராபிக்ஸ் செய்து முடிந்த அளவுக்கு அவர்கள் குறைவான அளவில் ஜட்டி, பிரா போட்டிருப்பதைப்போல மாற்றி, அந்தப் படத்தை போஸ்டராக அடித்து சென்னை முழுவதும் ஒட்ட நான் ரெடி" என்றார்.
பத்திரிகையாளர்களை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர்களையும் அவதூறாக பேசியது செய்தி ஒளிபரப்பை பார்த்த போது தெரிந்தது. இதனால், வேதனை ஏற்பட்டது. உறவினர்களும் நண்பர்களும் பத்திரிகையாளர்கள் குவார்ட்டருக்கும் கோழிபிரியாணிக்கும் செய்தி எழுதுபவரா என விசாரித்தனர். ஓளிபரப்பான பேச்சுக்கள் அடங்கிய "சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே இந்த கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி சட்டப்படி அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மாஜிஸ்திரேட் செங்கமலச்செல்வன், மனு மீதான விசாரணையை நவ.,4 க்கு தள்ளி வைத்தார்.
திண்டுக்கல்: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் எம்.ராமகிருஷ்ணன் சார்பாக, வக்கீல்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், எம்.அழகர்சாமி, ஏ.திருமூர்த்தி, சி.ரெக்ஸின்ராஜ், பி.கருணாகரன் ஆகியோர் திண்டுக்கல் ஜே.எம்.,2 கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:
தென்னிந்திய நடிகர் சங்க கண்டன கூட்டத்தில், ""விவேக், ஸ்ரீபிரியா, விஜயகுமார், சூர்யா, மஞ்சுளா, நளினி, சத்யராஜ், சரத்குமார், சேரன், கவுண்டமணி, அருண்விஜய், சத்யப்பிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினார்கள். இது குறித்து மனுதாரர் ராமகிருஷ்ணன், திண்டுக்கல் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் அக்., 10ம் தேதி புகார் கொடுத்தார். போலீசார், புகாரை வாங்க மறுத்தனர். எனவே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், வீடியோ மற்றும் ஆவணங்களை சமர்பிக்க தயார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் உமாராணி, திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார், ராமகிருஷ்ணன் கொடுத்துள்ள புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.



Why the Tamil Nadu Cheif Minister Mr.Karunanithi who is holding police portfolio in his hand keeping quiet. Its a real surprise to us living in foreign . Is the journalist of Tamil Nadu not having good rapport with the cheif minister.Or he wants see their mental agony and enjoy ?
ReplyDeleteHe is a veteran journalist and a writer.something Fishy.Without his concern the actors and actress will not go to this extent.Now its open secret.