அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜப்பானுக்கு நாளை வரவுள்ள வேளையில் ஜப்பானிய அரசு ஆப்கானிஸ்தானுக்கான புதிய உதவித் தொகையை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உதவியாக ஜப்பான் எரிபொருள் விநியோகம் செய்து வந்தது.
அந்த உதவியை ஜப்பான் நிறுத்தவுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் உதவிகள் வழங்குவது குறித்து ஜப்பானிய அரசாங்கம் உத்தேசித்து வருகிறது.
இந்த உத்தேசத் திட்டங்கள் குறித்து ஜப்பானியப் பிரதமர் யுகியோ ஹடோயாமா, ஜப்பான் வரும் திரு ஒபாமாவுடன் கலந்து ஆலோசிப்பார் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment