ஆம், அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாநிலத்தில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த பளிங்கு மாளிகை கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பிரபல பல் மருத்துவர் ஹூஷம் அல்டேர்ரி, அவரது மனைவி ராவ்வா அட்டா, 90 கோடி ரூபாய் செலவழித்து கட்டியுள்ளனர்.இந்தியாவில் உள்ள தாஜ்மகால் போன்றே வடிவமைத்து கட்டியுள்ள இவர்களின் காதல் மாளிகைக்கு "வில்லா தாஜ்' என்று பெயரிட்டுள்ளனர். ஸ்பானிஷ், எகிப்து, மொராக்கோ கட்டட கலையை அடிப்படையாக கொண்டு நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
இந்த தாஜ்மகால் 16 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 160 டன் சலவைக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தின் உள்ளே ஆறு பிரம்மாண்ட படுக்கை அறைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டடத்தை கட்டி முடிக்க ஐந்து ஆண்டு ஆனது.இந்த தாஜ்மகாலை ஏலத்தில் விட இந்த தம்பதியினர் தீர்மானித்துள்ளனர். ஏலம் ஆரம்ப தொகை 30 கோடி ரூபாய். அடுத்த மாதம் நடக்கிறது. "இல்லினாய்ஸ் பனியை தாங்க முடியாது; அதனால், நாங்கள் இதை விற்க முடிவு செய்துள்ளோம்' என்று இவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment