Pages

Sunday, November 1, 2009

மீட்டோ நினைவு விருது

புதுடில்லி:போதைக்கு அடிமையாகி பெற்றோரால் ஒதுக்கப்பட்ட வங்கதேச பெண் பாடகி, போதை பழக்கத்தை விட்டொழித்து இன்று உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்று பிரபலமடைந்து வருகிறார்.வங்கதேசத்தின் தாகா நகரைச் சேர்ந்தவர் அனுஷே அனாடில். கனடா நாட்டில் பள்ளி படிப்பை படித்து வந்த அனுஷே, "ஹெராயின்' என்ற போதை பழக்கத்துக்கு அடிமையானார்.


13 வயது முதல் 24 வயது வரை போதையில் உழன்று கொண்டிருந்தார். இதையடுத்து, இவர் தாயகம் திரும்பினார். குடும்பம் நடத்துவதற்குரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் 24 மணி நேரமும் போதையில் இருந்த அனுஷேவை, வீட்டை விட்டு விரட்டினர் பெற்றோர். போக்கிடம் இல்லாமல் தாகா நகர குடிசை பகுதியில் காலத்தை கழித்தார் இந்த இளம் பெண். தன்னிடம் உள்ள இசை ஞானம், போதையால் பாழ்பட்டு போவதை உணர்ந்த அனுஷே இந்த போதையில் இருந்து விடுபட முயன்றார்.


அதற்குரிய பயிற்சி நிலையம் வங்கதேசத்தில் இல்லாததால், 2001ம் ஆண்டு மும்பை அருகே ரிஷிவேலியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து போதை பழக்கத்தை மறந்தார்.பெங்காலி மொழியையும், மேற்கத்திய இசையையும் இணைத்து தனது இனிமையான குரலில் பாடும் திறமை படைத்த இவரை மறுவாழ்வு மையம் ஊக்குவித்தது.


மும்பையில் உள்ள இசை பள்ளிகளில் சேர்ந்து தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டார். பாலிவுட் திரைப்படங்களிலும் இவர் ஒரு சில பாடல்களை பாடி பிரபலமடைந்து விட்டார்.தற்போது, தனக்கென ஒரு இசைக் குழுவை உருவாக்கி, உலகம் முழுவதும் இசை சுற்று பயணம் செய்து, பலநாட்டு இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.


டில்லியில் கடந்த வாரம் நடந்த மதநல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் மீட்டோ நினைவு விருது, அனுஷேவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.இசைக்கு மட்டுமல்ல, போதையில் சிக்குண்டவர்களை மீட்கும் சேவையிலும் தற்போது அனுஷே ஈடுபட்டு வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அனுஷே, வங்கதேச கலைப்பொருள் மையத்தையும், பேஷன் உடை கடையையும் நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment