
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை பவுன் ரூ.12 ஆயிரத்தை எட்டிப்பிடித்தது. அதை தொடர்ந்து “ஜெட்” வேகத்தில் அதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 464 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.12 ஆயிரத்து 776 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.1597 ஆக விற்றது.
நேற்று மாலை பவுனுக்கு மேலும் ரூ.8 அதிகரித்து ரூ.12 ஆயிரத்து 784 ஆக விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு மேலும் ரூ.80 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 864 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1,608 ஆக விற்கப்படுகிறது.
இதே வேகத்தில் விலை உயர்ந்தால் தங்கம் பவுன் ரூ.13 ஆயிரத்தை நெருங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு சந்தையை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் திருமண சீசன் என்பதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
நாளுக்கு நாள் விலை ஏறும் தங்கத்தை வாங்கும் பொது மக்கள் செண்டிமெண்ட் காரணமாக அப்படியே வாங்கி செல்கின்றன்ற்னர் . இனி தயவு செய்து தெரிந்த ஆசாரியிடம் கொடுத்து உரசி எத்தனை காரட் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .
- நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment