
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
என்னுடைய முன்னோர்கள் திண்டுக்கல் அன்பு விலாஸ் தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை தொடங்கினார்கள். இக்கடையை சுமார் 70 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதன் பெயர் உரிமையை இதுவரை யாருக்கும் வழங்கவில்லை. இந்தநிலையில் சென்னையில் தலப்பாகட்டு என்ற பெயரில் 16 கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இதனால் எங்களது வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே தலப்பாகட்டு என்ற பெயரில் பிரியாணி கடை நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் தலப்பாகட்டு என்ற பெயரில் பிரியாணி கடை நடத்த இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், இது குறித்து 16 கடைகளுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment