Pages

Sunday, November 1, 2009

சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மும்பை கப்பலை


மீட்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மும்பையைச் சேர்ந்த எஸ்.என்.பி., நிறுவனத்திற்கு சொந்தமான, "அல்காலிக்ஸ்' என்ற கப்பல், ரஷ்யாவில் இருந்து கோதுமை மூட்டைகளுடன் கென்யாவிற்கு சென்றது.


கடந்த மாதம் 23ல் அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் செல்லும் போது, சோமாலியா கடற்கொள்ளையர்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. அதில் 24 இந்தியர்களும், மியான்மர் நாட்டினர் இருவரும் இருந்தனர். அதில், நெல்லை மாவட்டம் வேலப்பநாடாரூரைச் சேர்ந்த சேர்மன் என்பவரது மகன் மாணிக்கம்(27), இன்ஜினியராக உள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த வீரமோகன் என்பவரது மகன் விஜய் கணேஷ்(24), சமையல்காரராக பணியாற்றுகிறார்.


இருவரையும் மீட்கும்படி அவர்களது குடும்பத்தினர், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, சோமாலியா கொள்ளையர்கள் வழக்கம் போல இடைத்தரகர்கள் மூலம் கப்பல் நிறுவனத்திடம் இருந்து 50 கோடி ரூபாய் வரையிலும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment